மயிலாடுதுறை:அமைச்சர் பெரியகருப்பன் திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயிலில் குடும்பத்துடன் நேற்று (செப். 20) தரிசனம்செய்தார். மேலும், அங்கு நடைபெற்ற அவரது உறவினர் நவநீதகிருஷ்ணன், சுப்புலட்சுமி தம்பதியினரின் சஷ்டியப்த பூர்த்தி திருமணத்திலும் கலந்துகொண்டார்.
பின்னர் நேற்று நண்பகலில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதினத்திற்குச் சென்ற அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதினம் 27ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்து பெரியகருப்பன், அவரது மனைவி ஆகியோர் ஆசிபெற்றனர்.