மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த குமாரக்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச கால்நடை மருத்துவ முகாம் இன்று (நவம்பர் 26) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாம் - தீவனம், கோமாரி நோய் தடுப்பூசி வழங்கல் - veterinary camp in mayiladuthurai
மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற கால்நடைகளுக்கான இலவச மருத்துவ முகாமில் பங்கேற்ற அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
veterinary-camp
மேலும், முகாமில் கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி, தீவனப்புல், தீவனம், கன்றுகளுக்கு தடுப்பூசி, கோமாரி நோய் தடுப்பூசி மற்றும் பல்வேறு நோய்கள் குறித்து பரிசோதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நாகப்பட்டினம் ஆட்சியர் பிரவீன் நாயர், மயிலாடுதுறை மாவட்ட உருவாக்க சிறப்பு அலுவலர் லலிதா, பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் பவுன்ராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் கால்நடைத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.