தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழருவி மணியன் ஒரு தொகுதியில் வென்றுவிட்டு பேசட்டும்' - ஓ.எஸ். மணியன்! - DMK - ADMK

நாகை: தமிழ்நாட்டிலிருந்து இரு திராவிடக் கட்சிகளும் அகற்றப்படவேண்டும் என கூறும் தமிழருவி மணியன் ஒரு தொகுதியில் நின்று வென்று விட்டு பேசட்டும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

Minister O.S.Manian Hits Back Tamilaruvi Manian
Minister O.S.Manian Hits Back Tamilaruvi Manian

By

Published : Nov 26, 2019, 7:59 AM IST

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே தனியார் பேருந்து விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களைச் சந்தித்து கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆறுதல் கூறினார்.

விபத்தில் காயமடைந்தவர்களைப் பார்த்த அமைச்சர்

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ' நடிகர் சங்கத் தேர்தலில் நியாயமான முடிவை ஏற்படுத்த முடியாத மூத்த நடிகர்களால் எப்படி நாட்டை வழிநடத்த முடியும். அதேபோல் நடிகர் சங்கக் கட்டடத்தை திருப்தியாக கட்ட முடியாத நடிகர்கள் நாட்டைத் திருத்த வருகிறேன் என்பது வேடிக்கையாக உள்ளது' என நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோரை மறைமுகமாக சாடினார்.

ஓ.எஸ்.மணியன் செய்தியாளர் சந்திப்பு

மேலும் தமிழ்நாட்டிலிருந்து இரு திராவிட கட்சிகளும் அகற்றப்படவேண்டும் என கூறும் தமிழருவி மணியன், ஒரு தொகுதியில் ஆவது நின்று வென்றுவிட்டு பேசட்டும் எனக் கூறினார்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர்களைச் சந்தித்த தமிழ்நாடு அமைச்சர்கள்!

ABOUT THE AUTHOR

...view details