ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

''முதலமைச்சராக எனக்கும் ஆசையுண்டு'' - சைடு கேப்பில் கிடா வெட்டிய அமைச்சர் ஓ.எஸ். மணியன் - முதலமைச்சர் பதவி குறித்து ஓஎஸ் மணியன்

நாகை: தமிழ்நாடு முதலமைச்சராக வரவேண்டும் என்று தனக்கும் ஆசையுள்ளதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன்  தெரிவித்துள்ளார்.

maniyanan interview
maniyanan interview
author img

By

Published : Dec 2, 2019, 3:59 PM IST

Updated : Dec 2, 2019, 5:22 PM IST

கடந்த சில தினங்களாக நாகை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வேளாங்கண்ணி, செபஸ்தியார் நகர் பகுதியில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

அப்போது அந்தப் பகுதியில் வடியாமல் தேங்கி நின்ற கழிவு நீரை, அங்கிருந்த அதிமுகவின் கீழையூர் ஒன்றியச் செயலாளர் வேதையன் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், "உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும். உள்ளாட்சித் தேர்தல் நடுக்கத்தால் தேர்தல் ஜுரம் ஏற்பட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றிருக்கிறார்" என்று கடுமையாக விமர்சித்தார்.

அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேட்டி

ஸ்டாலின்தான் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் என பாஜக நிர்வாகி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "நான் கூட தான் ஆசைப்படுகிறேன். ஆனால், நடக்குமா? மேலும் அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுகவின் கொள்கையை தூக்கி எறிந்துவிட்டு, இந்துத்துவா கொள்கையை உயர்த்திப் பிடிக்கும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவைச் சந்தித்து மாலை அணிவித்த, திமுக தலைவர் ஸ்டாலின், மதச்சார்பற்ற கட்சிக்குத் தலைவரா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: பொதுப்பணித்துறையினர் அலட்சியத்தால் நீரில் மூழ்கும் நெற்பயிர்கள்!

Last Updated : Dec 2, 2019, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details