தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பத்தாண்டுகள் சிறப்பான ஆட்சியால் அதிமுக வெற்றி பெறும் - அமைச்சர் ஓ.எஸ். மணியன் - தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021

நாகை: பத்தாண்டு காலம் சிறப்பான ஆட்சி செய்துள்ளதால், 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என வாக்களித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

அமைச்சர் ஓ.எஸ். மணியன்
அமைச்சர் ஓ.எஸ். மணியன்

By

Published : Apr 6, 2021, 12:07 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரும் தற்போதைய கைத்தறி துணிநூல் துறை அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தொகுதி, தலைஞாயிறு ஓரடியம்புலத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் தனது வாக்கினை மக்களுடன் வரிசையில் நின்று பதிவுசெய்தார்.

பத்தாண்டுகள் சிறப்பான ஆட்சியால் அதிமுக வெற்றி பெறும்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்து ஆண்டு காலம் அதிமுக சிறப்பான ஆட்சி செய்துள்ளதால், 234 தொகுதியிலும் வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையும்” எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details