தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2021 தேர்தலில் மு.க.ஸ்டாலினின் கபட நாடகம் எடுபடாது: ஓ.எஸ்.மணியன்! - Minister OS Maniyan talks about MK Stalin in mayiladurai

மயிலாடுதுறை: 2021 சட்டப் பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலினின் கபட நாடகம் எடுபடாது என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தேர்தல் குறித்து பேச்சு  அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மு.க.ஸ்டாலின் குறித்து பேச்சு  அமைச்சர் ஓ.எஸ்.மணியன்  விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா  Minister OS Maniyan talks about the 2021 election  Minister OS Maniyan talks about MK Stalin in mayiladurai  Minister OS Maniyan
Minister OS Maniyan talks about MK Stalin in mayiladurai

By

Published : Jan 26, 2021, 12:23 AM IST

மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்றார்.

அப்போது, 10 அரசுப் பள்ளி, 3 அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்து 273 மாணவர்கள், 980 மாணவிகள் என மொத்தம் இரண்டாயிரத்து 253 பேருக்கு ரூ.89 லட்சத்து 30 ஆயிரத்து 519 மதிப்புடைய விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மகாராணி தலைமையில் நடைபெற்ற விழாவில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ், மாவட்ட அதிமுக செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறியதாவது, "எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவருமே தெய்வ நம்பிக்கை உடையவர்கள். அதிமுகவினர் கோயில் விழாக்களில் கலந்து கொள்வது வெளிப்படையாக தெரிந்த விஷயம். ஆனால், மத நம்பிக்கை இல்லை என்று சொல்லும் திமுகவினர் பொய் பரபரப்புகளை செய்து எடுபடாத நிலையில், தற்போது வேலினை கையில் எடுத்துள்ளனர்.

பழனிசாமியின் கையில் உள்ள வேல் மு.க.ஸ்டாலினுக்கு ஆயுதமாக மாறுமே தவிர வாக்காக மாறாது. பொய் வாக்குறுதியை அளித்து மக்களிடம் வாக்குகளை பெற்ற திமுகவினரை பற்றி மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர். எனவே, இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலினின் கபட நாடகம் எடுபடாது" என்றார்.

இதையும் படிங்க:விவசாயிகளுக்கு விரைவில் நல்லது நடக்கும்- அமைச்சர் ஓ.எஸ். மணியன்

ABOUT THE AUTHOR

...view details