தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கட்சி ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்பது ரஜினிக்குத் தெரியும்!' - 399 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா

நாகப்பட்டினம்: நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி ஆரம்பித்தால், தமிழ்நாடு அரசியலில் என்ன நடக்கும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் சூசகமாகத் தெரிவித்தார்.

o.s.maniyan
o.s.maniyan

By

Published : Oct 28, 2020, 11:02 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் பி.ஆர். புரத்தில் சுனாமி குடியிருப்புக்கான பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் ஓ.எஸ். மணியன் விழுந்தமாவடி, காமேஸ்வரம், காரப்பிடாகை கிராமங்களைச் சேர்ந்த 399 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தமிழ்நாட்டில் அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பது அவரவர் சொந்த விருப்பமும், முடிவும்கூட. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி ஆரம்பித்தால், தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கும், அவர்களின் சக்தி என்ன? என்று அவருக்கு நன்றாகத் தெரியும். புதிய கட்சியை தொடங்குவது குறித்து அவர் மட்டுமே முடிவு செய்யும் விஷயம்" என்றார்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால்...

இதையும் படிங்க:காலாவதியான கூடாரமாக தமிழ்நாடு பாஜக உள்ளது - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details