தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்' - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் - பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு

நாகப்பட்டினம்: நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டப்பேரவைத் தேர்தல் வேறு எனவும் வரும் தேர்தலில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் எனவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Minister OS Maniyan hopes that the people will vote for AIADMK
Minister OS Maniyan hopes that the people will vote for AIADMK

By

Published : Jan 10, 2021, 6:50 PM IST

நாகையில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று (ஜனவரி 10) வழங்கினார். அப்போது, அதிக அளவிலான பயனாளிகளுக்கு ஒரே நேரத்தில் டோக்கன் வழங்கப்பட்டதால், பொதுமக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றாமல் முண்டியடித்து உள்ளே சென்றனர்.

தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைப்போம்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

பாஜக- அதிமுகவின் கூட்டணியால் அதிமுகவிற்கு பின்னடைவு உள்ளது என்ற கருத்து முற்றிலும் முரணானது. தமிழ்நாட்டில் நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு. அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கே வாக்களிப்பார்கள் என்றார்.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி குறித்து 3 நாட்களில் பதில் கிடைக்கும்: எல்.முருகன்

ABOUT THE AUTHOR

...view details