நாகையில் நகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான 591 விலையில்லா மடிக்கணினிகள், 268 மிதிவண்டிகளை பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் ஓஎஸ். மணியன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விருது கொடுத்தவர்களை உதைக்க வேண்டும் என்று பேசியுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மோடியை நேரில் பார்த்து, அவர் சொன்னதை நிறைவேற்றிவரலாம் என்று பதிலடி கொடுத்தார்.