தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்டவர் டிடிவி தினகரன்: ஓ.எஸ். மணியன் தாக்கு - ttv dinakaran

இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்ட டிடிவி தினகரன் அதிமுக இணைப்பு பற்றி பேசுவது விநோதமானது என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

minister os maniyan
இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்டவர் டிடிவி தினகரன் ஓ.எஸ். மணியன் தாக்கு

By

Published : Feb 10, 2021, 3:39 PM IST

நாகை:நாகையை அடுத்த சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் இருந்த அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில், நாகை சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, அரசு அலுவலர்கள், மீனவ கிராமத்தினர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், ”இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதற்காக உச்ச நீதிமன்றம்வரை சென்ற டிடிவி தினகரன் அதிமுக இணைப்பு குறித்து பேசுவது விநோதமானது.

இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்டவர் டிடிவி தினகரன் ஓ.எஸ். மணியன் தாக்கு

18 சட்டப்பேரவை உறுப்பினர்களை தன்னோடு அழைத்துச் சென்று அதிமுகவை ஆட்சியிலிருந்து இறக்குவதற்கு, இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி வேலை பார்த்தவர் டிடிவி தினகரன். சசிகலாவை வரவேற்று சுவரொட்டி ஒட்டும் அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்" என்றார்.

இதையும் படிங்க:பாஜகவுக்கு யார் சிறந்த அடிமை ஓபிஎஸ் - ஓபிஆர் இடையே போட்டி- உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details