தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சட்டப்பேரவையில் ஸ்டாலின் வாயை திறந்தால் பூட்டிவிடுவோம்’ -அமைச்சர் ஓ.எஸ். மணியன்! - DMK Leader MK Stalin news in Tamil

நாகை: சட்டப்பேரவையில் மு.க. ஸ்டாலின் வாயை திறந்தால் பூட்டிவிடுவோம் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

‘முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் வாயை திறந்தால் பூட்டிவிடுவோம்’ -அமைச்சர் ஓஎஸ் மணியன்!
‘முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் வாயை திறந்தால் பூட்டிவிடுவோம்’ -அமைச்சர் ஓஎஸ் மணியன்!

By

Published : Jan 26, 2021, 11:29 AM IST

நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நாகை அவரித்திடலில் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் அனைத்து ஜீவாதார பிரச்னையும் விட்டுக் கொடுத்தது திமுக. அதனைப் பெற்றுத் தந்தது அதிமுக. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் பொய் அறிக்கைகளால் வெற்றி பெற முடியாது. அதிமுக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்து வைத்தாலே தேர்தலில் திமுக டெபாசிட் இழக்கும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பயந்து மு.க. ஸ்டாலின் பதில் சொல்ல முடியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறார்” என தெரிவித்தார்.

மேலும், திமுக கிராமசபை கூட்டங்களில் பொய் பரப்புரை செய்யும் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசிவிட முடியுமா? வாயை திறந்தால் பூட்டிவிடுவோம் என்றார்.

இதையும் படிங்க...பத்ம ஸ்ரீ விருது பெற்ற கோவை மூதாட்டி!

ABOUT THE AUTHOR

...view details