நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகாவிற்குட்பட்ட 581 பயனாளிகளுக்கு 7 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். ஆகவே விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கலாம்.