நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர், சிக்கல், பெருங்கடம்பனூர், வடகரை உள்ளிட்ட இடங்களில் அம்மா மினி கிளினிக்கை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ” தமிழகத்தில் புதிதாக தொடங்கும், தொடங்கிய கட்சிகள் எம்ஜிஆர் பெயரை பயன்படுத்துகின்றன என்றால், அந்த அளவிற்கு வரலாறு படைத்தவர் எம்ஜிஆர்.
தமிழகத்தில் ஏது வெற்றிடம்? - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் - கமல் ஹாசன்
நாகை: அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக விளங்கி சிறந்த முதலமைச்சராக பழனிசாமி இருக்கும்போது தமிழகத்தில் ஏது வெற்றிடம் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார்.
நடிகர்கள் புதிது புதிதாக கட்சி தொடங்குவதும், அதற்கு தமிழகத்தில் வெற்றிடம் தான் காரணம் எனக் கூறுவதும் வாடிக்கையாக உள்ளது. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். உலகத்திற்கே எடுத்துக்காட்டாக கரோனா வைரஸ் பாதித்தும், அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலம் என்ற இந்திய அரசின் பரிசை பெற்று சிறந்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி திகழும்போது தமிழகத்தில் எங்கே இருக்கிறது வெற்றிடம்? ” என்றார்.
இதையும் படிங்க: போலி நீட் சான்றிதழ் விவகாரம்: மாணவி, தந்தையை கைதுசெய்ய காவல் துறை முடிவு!