கரோனா பொது முடக்கம் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதையடுத்து அந்த காலகட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மதிய உணவுக்கு பதிலாக பணம் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்திருந்தது.
மதிய உணவிற்கு பதிலாக அரிசி, பணம் வழங்கிய கல்வி அமைச்சர்
நாகை: காரைக்காலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவிற்கு பதிலாக அரிசி, பணத்தை கல்வி அமைச்சர் வழங்கினார்.
அரசு பள்ளி மாணவர்கள் மதிய உணவிற்கு பதிலாக அரிசி மற்றும் பணத்தை காரைக்காலில் கல்வி அமைச்சர் மாணவர்களுக்கு வழங்கினார்
அதன்படி காரைக்கால் அடுத்த அம்பத்தூரில் உள்ள GPS அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அவர்களின் பெற்றோரிடம் பணம், அரிசி வழங்கும் திட்டத்தை அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தொடங்கிவைத்தனர்.
அதன்படி 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை 299 ரூபாய், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 390 ரூபாய் ரொக்கமும் அதனுடன் 4 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது.