தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்காவை திருமணம் செய்தால் தங்கச்சி இலவசம்? திமுகவின் தேர்தல் அறிக்கையை கேலி செய்த அமைச்சர்

மயிலாடுதுறை: அக்காவை திருமணம் செய்தால் தங்கச்சி இலவசம் என்ற வாக்குறுதி திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேலி செய்துள்ளார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேலி
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேலி

By

Published : Jan 18, 2021, 9:51 AM IST

Updated : Jan 18, 2021, 10:14 AM IST

மயிலாடுதுறையில் எம்ஜிஆரின் 104ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட அதிமுக செயலாளர் வி.ஜி.கே. செந்தில் நாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மேலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், எஸ். பவுன்ராஜ், பி.வி. பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியதாவது, "அதிமுகவை புறக்கணிக்கிறோம் என்ற வாசகங்கள் வைத்து திமுகவினர் பரப்புரையில் ஈடுபடுகின்றனர். வாரிசு அரசியலை ஒழிப்போம், ஜெயலலிதாவின் ஆட்சியை அமைப்போம். திமுகவில் இருக்கும் பெண்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று சொல்லத் தொடங்கி விட்டனர். அதிமுகவை புறக்கணிக்கிறோம் என்று கருணாநிதி கூறியபோதே ஒரு கை பார்த்தோம்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேலி

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பொய்யான வாக்குறுதியை நம்பி திருச்சியில் பொதுமக்கள் திமுகவுக்கு வாக்களித்தனர். அதேபோல கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுகவினர் வெற்றி பெற்றனர். வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் அக்காவை கல்யாணம் செய்பவர்களுக்கு தங்கச்சி இலவசம் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்வார். திமுகவினரின் பொய் வாக்குறுதியை மக்கள் நம்பி விடக்கூடாது.

வீராணம் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள ஊழல் பற்றி விரிவாக கூற உள்ளேன். ஊழல் செய்வதில் திமுகவினர் போன்ற மன்னர்களை எங்கும் பார்க்க முடியாது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்!

Last Updated : Jan 18, 2021, 10:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details