நாகப்பட்டினம்புதிய பேருந்து நிலையம் அருகே அவுரி திடலில் திமுக சார்பில் நடைபெற்ற திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவரும் நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கௌதமன் தலைமையிலும் தட்கோ தலைவர் உ.மதிவாணன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் பங்கேற்றுப் பேசினார். அப்போது பொதுக் கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், "இந்தியாவிலேயே கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறிய ஒரே ஒரு முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே" என்றார்.