தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’விரைவில் தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்படுவர்’ - அமைச்சர் மெய்யநாதன் தகவல்! - மயிலாடுதுறை அண்மைச் செய்திகள்

மயிலாடுதுறை : விரைவில் தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் தேவையான அளவு பணியமர்த்தபடுவர் என சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

சீர்காழி அரசு மருத்துமனையில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்
சீர்காழி அரசு மருத்துமனையில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்

By

Published : May 26, 2021, 11:42 AM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துமனையில் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். பின்னர் கரோனா தடுப்பு பணிகள், தேவைப்படும் வசதிகள் ஆகியவை குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “கரோனா தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்ட தளர்வுகளற்ற ஊரடங்கை விமர்சித்தவர்கள், ஒரு வாரத்திற்கு பின்னர் அதனையே பாராட்டுவர். கரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சீர்காழி அரசு மருத்துமனையில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன்

இந்த அளவிற்கு கடுமையான ஊரடங்கு, உலகத்திலேயே முதன்முறையாக தமிழ்நாட்டிலேயே அமல்படுத்தபட்டுள்ளது. விரைவில் தற்காலிக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் தேவையான அளவு பணியமர்த்தபடுவர்” என்றார்.

இதையும் படிங்க : ’தடுப்பூசிகள் உற்பத்திக்கு ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்துக்கு நிதி ஒதுக்குக’ - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details