தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கரோனா பரிசோதனை - அமைச்சர் மெய்யநாதன் - வீடுகளுக்கு நேரடியாக சென்று கரோனா பரிசோதனை

நாகப்பட்டினம்: வீடுகளுக்கே நேரடியாகச் சென்று கரோனா பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு நேரடியாக சென்று கரோனா பரிசோதனை
வீடுகளுக்கு நேரடியாக சென்று கரோனா பரிசோதனை

By

Published : Jun 7, 2021, 11:54 AM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவருவதால், அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பிரவீன்நாயர், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கரோனா பரிசோதனை

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக ஏழு லட்சம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை அளிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவர்கள் மாவட்டத்தில் உள்ள இரண்டு லட்சம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்படும்" என்றார்.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் 4000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

ABOUT THE AUTHOR

...view details