தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் வழங்க நடவடிக்கை -அமைச்சர் மெய்யநாதன் - அமைச்சர் மெய்யநாதன்

நாகப்பட்டினம்: அரசு மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்ஸிஜன் வழங்குவது போல் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

doctor
doctor

By

Published : May 29, 2021, 9:38 AM IST

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலமாக புதிதாக நியமிக்கப்பட்ட தற்காலிக மருத்துவர், செவிலியருக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் வைத்து நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், 17 மருத்துவர்கள், 45 செவிலியர்கள் உள்ளிட்ட 130 சுகாதார பணியாளர்களுக்கு பணி நியமனத்திற்கான சான்றிதழ்களை வழங்கினார்.

பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர்

அதன்பின் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது, "நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலியாக இருந்த 17 மருத்துவர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பட்டுள்ளன. நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பரவல் கட்டுபாட்டில் வந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகள் இன்றி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அதே போல தனியார் மருத்துவமனைகளுக்கும் இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஆக்ஸிஜன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details