மயிலாடுதுறை: சீர்காழியில் மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டி தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 25 அணிகள் பங்கேற்றன. போட்டியை சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, விளையாட்டு, இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யனாதன் தொடங்கிவைத்தார்.
போட்டி தொடங்குவதற்கு முன் பங்கேற்ற அணிகளின் வீரர்கள் அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் கைப்பந்தினை எடுத்து விளையாடி அமைச்சர் போட்டியை தொடங்கிவைத்தார். இதில் எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா.முருகன் பங்கேற்றனர்.