தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"விளையாட்டு வீரர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகை" - அமைச்சர் மெய்யநாதன்! - today latest news

TN govt Rs 100 crore prize to sports champions: விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு இதுவரை 100 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக தமிழக அரசு வழங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

TN govt Rs 100 crore prize to sports champions
தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கியுள்ளது - அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 1:21 PM IST

தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு 100 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கியுள்ளது - அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தகவல்

மயிலாடுதுறை மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாகக் குத்தாலத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 3 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கபடிப் போட்டி தனியார்ப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கடந்த 27ம்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.

'நாக் அவுட்' (Knock out) முறையில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டிகளில் மயிலாடுதுறை, திருவாரூர், கோயமுத்தூர், திருச்சி, சேலம், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் தமிழ்நாடு காவல்துறை அணி, வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணி, சென்னை கட்டங்குடி பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணி, திருவாரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

தமிழ்நாடு காவல்துறை அணியும், வெண்ணங்குழி கனகு பிரதர்ஸ் அணியும் பங்கேற்ற முதலாவது அரையிறுதி போட்டியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணியும், பிர்ஸ்ட் யுனிவர்சிட்டி அணியும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

மேலும் மிகுந்த ஆரவாரத்துடனும் கபடிப் போட்டி வீரர்களை உற்சாகப்படுத்தியும் ஏராளமான கபாடி ரசிகர்கள் இந்த போட்டிகளைக் கண்டு ரசித்தனர். முன்னதாக போட்டியைத் துவங்கி வைத்த அமைச்சர் மெய்யநாதன் விழா மேடையில் பேசினார். அப்போது அவர், "இந்தியா திரும்பிப் பார்க்கும் அளவில் தமிழ்நாடு வீரர்கள் விளையாட்டுத் துறையில் பல சாதனைகளைப் படைத்து வருவதற்குக் காரணம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டுத் துறைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்ததே ஆகும்.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்றால் ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கத்திற்கு ரூ.2 கோடி, வெண்கலப் பதக்கத்திற்கு ரூ.1 கோடி என்று தமிழக அரசு வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பரிசுத் தொகையை வழங்குகிறது. அதேபோல, வெளிநாடுகளில் தேசிய அளவில் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் சாதித்து வெற்றி பெற்றும் வீரர்களுக்கு வெற்றி பெற்ற 24 மணி நேரத்தில் அவர்களுக்கான ஊக்கத் தொகையை அந்தந்த வீரர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாராக விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு இதுவரை 100 கோடி ரூபாய் தமிழக அரசு பரிசுத் தொகை வழங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:தெலங்கானா சட்டசபை தேர்தலில் களமிறங்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன்!

ABOUT THE AUTHOR

...view details