தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

45 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன் - மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 45 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

45 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்
45 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்

By

Published : Aug 27, 2022, 9:39 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டுக்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரசின் மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 52 பள்ளிகளை சேர்ந்த 8,667 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.40 கோடி மதிப்பில் மிதிவண்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

45 மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார் அமைச்சர் மெய்யநாதன்

இதில், முதற்கட்டமாக மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 45 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2,32,875 மதிப்பில் மிதிவண்டிகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். இதில், எம்.எல்.ஏ.,க்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் பாலஸ்தாபனம்

ABOUT THE AUTHOR

...view details