வேளாண்மை பொறியியல் துறை சார்பாக நாகப்பட்டினத்தில் மண் பரிசோதனை நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. தமிழக கைத்தறி அமைச்சர் ஓஎஸ்.மணியன் இதில் கலந்துகொண்டு, 75 லட்ச ரூபாய் மதிப்பிலான மண் பரிசோதனை நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் - எம்ஜிஆர் பாடலைப் பாடி பதிலளித்த அமைச்சர் - tnpsc scam
நாகப்பட்டினம்: ‘சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடி டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓஎஸ்.மணியணிடம், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கிறது’ என்ற எம்ஜிஆர் பாடலை பாடிய எஸ்.மணியன், தேர்வு முறைகேடுகள் தடுக்கப்பட வேண்டும். இந்த குற்றங்கள் மீண்டும் நடைபெறாத அளவுக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றார்.
டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 750 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் , தற்போது கொள்முதல் நிலையங்கள் அதிகம் இருப்பதால், நாள் ஒன்றுக்கு 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், கொள்முதல் நிலையங்கள் இல்லாத விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால், 3 நாட்களில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.