தஞ்சாவூர்:கும்பகோணம்அருகே தாராசுரம், தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட அளவிலான மெகா வேலைவாய்ப்பு முகாமில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். அதன்பின்னர், செய்தியாளரைச் சந்தித்த அவர், “தமிழ்நாட்டில், திட்டமிட்டபடி, 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடம் வரும் 13ம் தேதி திறக்கப்படும். தனியார் பள்ளிகள் பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் பெற்றோரிடம் எந்த தொகையும் வசூலிக்க கூடாது. அப்படி வசூலிப்பதாக புகார் வந்தால் அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், மாநிலம் முழுவதும் பள்ளி செயல்படும் நேரத்தை மாற்றுவது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையிலேயே அறிவித்துள்ளார். எனவே, இது 5 ஆண்டு காலத்தில் படிப்படியாக நிறைவேற்றப்படும்.