நாகப்பட்டிணம்:நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புல சாலையில் அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியே வேகமாக வந்த தனியார் மினி பேருந்து அரசு பேருந்து மீது மோதாமல் இருக்க நிறுத்த முயன்றது. ஆனால் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலை அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.