தமிழ்நாடு

tamil nadu

எஸ்பி அலுவலகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் போராட்டம்!

By

Published : Aug 25, 2020, 7:17 PM IST

நாகப்பட்டினம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்டட வேலைக்காக வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டம்

நாகப்பட்டினம் அடுத்துள்ள ஓரத்தூர் பகுதியில் நடைபெற்று வரும் அரசு புதிய மருத்துவ கல்லூரிக்கான கட்டுமான பணியில் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் பிகார் மாநிலத்தை சேர்ந்த 55 தொழிலாளர்களுக்கு ஊதியம், உணவு சரியாக கொடுக்காமல் வேலை வாங்குவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று (ஆக. 24) இரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த வெளிப்பாளையம் காவல்துறையினர் அவர்களிடம் கலைந்து செல்லும்படி பேச்சு வார்த்தை நடத்தினார்.
ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அங்கிருந்து நகராமல் தங்களுக்கு ஊதியம் மற்றும் உணவு கொடுக்காமல் அறையில் பூட்டி வைத்து மேற்பார்வையாளர் முகேஷ் மற்றும் பலர் அடித்து துன்புறுத்துவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களை அவசர அவசரமாக அழைத்து சென்ற காவல்துறையினர் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காது 15 பேர் மட்டுமே பயணிக்க கூடிய ஒரு வேனில் அனைவரையும் கூட்டமாக ஏற்றி கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கடும் சிரமத்தை சந்தித்து மொழி தெரியாமல் அடி, உதை வாங்கிகொண்டு வேலை செய்து வருவதாக வேதனையோடு கூறியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு கொண்டு சேர்க்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இரவு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details