தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் 16ஆம் தேதி புதிய வாக்காளர் வரைவு பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இப்பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதலுக்கான சிறப்பு முகாம் இன்று (டிசம்பர் 13) முடிவடைந்தது.
அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதலுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தால் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக பூத் ஏஜெண்டுகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 71 பூத்களில் 90ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். பல்வேறு பூத்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் 50க்கும் மேற்பட்ட உயிரிழந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளது. இதேபோல், இடம் பெயர்ந்தவர்கள் பெயர்களும் நீக்கப்படாமல் உள்ளதாக பூத் ஏஜெண்டுகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி இதனால் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கள்ள ஓட்டு போட அதிகளவில் வாய்ப்புள்ளதாகவும், உடனடியாக இவர்களது பெயர்களை நீக்க வேண்டும் என்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பூத் ஏஜெண்டுகள் தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆடைக்குள் 154 கிராம்.. சீட்டுக்கடியில் 309 கிராம்.. தங்கம் கடத்தல் குறித்து சுங்கத்துறை விசாரணை