தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அலட்சியமாக வீசப்பட்ட கரோனா கவச உடைகளை மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எடுத்துச் சென்ற அவலம்!

நாகப்பட்டினம் : தனியார் மருத்துவமனை நிர்வாகத்தால் அலட்சியமாக வீசப்பட்ட பயன்படுத்தப்பட்ட கரோனா கவச உடைகளை, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் எடுத்துச் செல்லும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயன்படுத்தப்பட்ட கரோனா கவச உடைகளை எடுத்துச் செல்லும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்
பயன்படுத்தப்பட்ட கரோனா கவச உடைகளை எடுத்துச் செல்லும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்

By

Published : Mar 21, 2021, 9:28 AM IST

நாகை, நீலா மேல வீதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தத் தனியார் மருத்துவமனை, பயன்படுத்தப்பட்ட கரோனா கவச உடைகளை முறையாக அப்புறப்படுத்தப்படாமல், நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மட்டும் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் தொடர்ந்து வீசி வருகிறது.

அலட்சியமாக வீசப்பட்ட கரோனா கவச உடைகளை மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எடுத்துச் சென்ற அவலம்

இந்நிலையில் குப்பைத் தொட்டியில் போடப்பட்ட கரோனா கவச உடைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு சாலையில் கிடந்தன. அவற்றை, தொற்று அபாயம் குறித்து அறியாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், எடுத்துச் சென்றுள்ளார். இதுகுறித்த காணொலிக் காட்சி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயன்படுத்தப்பட்ட கரோனா கவச உடைகளை, பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் அலட்சியமாக குப்பைத் தொட்டியில் வீசிச் சென்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:திமுகவை கலாய்த்த முதலைமைச்சர் முதல் மூதாட்டியிடம் வம்பிழுத்த மன்சூர் அலிகான் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

ABOUT THE AUTHOR

...view details