மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் அருகே பனங்காட்டான்குடி, மாதிரவேளுர் கிராமத்தில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
இப்பகுதியில் சாலை குண்டும் குழியுமாக, மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியும் மிகவும் மோசமாகவும் இருந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் சீர்காழி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதியிடம் கோரிக்கைவைத்தனர்.
பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைக்க ஏற்பாடுசெய்தார். அதற்கான பூமி பூஜை நேற்று (பிப். 24) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. பாரதி சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைத்தார். உடன் கொள்ளிட அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் நற்குணன், மேற்கு ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், கழக நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அம்மா மினி கிளினிக் திறப்பு விழா: சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பு