மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைதீஸ்வரன்கோவில் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் புங்கனூர், திருப்புன்கூர், சாவடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் வைத்தீஸ்வரன்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
அப்போது அங்கு பணியிலிருந்த பெண் மருத்துவர் ஓபி சீட் இல்லாமல் சிகிச்சையளிக்க முடியாது என மறுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில், உடல் நிலை சரியில்லாத பெண்ணின் உறவினர்கள் உடனடியாக சிகிச்சையளிக்கக் கோருகின்றனர். ஆனால் மருத்துவர் மறுக்கவே இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.