நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் புகழ் பெற்றதும், பழமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த நிலையில், மே 9ஆம் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலய தெப்ப உற்சவம்! - Nagai
நாகை: மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்ப உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
mayuranather-temple
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தெப்போற்சவம் நேற்று (மே 21) நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர்.
சுவாமிக்கு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றதை அடுத்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப ஆலய தீர்த்தக் குளத்தில் மூன்று சுற்றுகள் வலம் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து திருவாடுதுறை ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.