கடந்த மாதம் 6ஆம் தேதி மயிலாடுதுறை, மாயூரநாதர் கோயில் யானை ’அபயாம்பிகை’ இந்து சமய அறநிலையத்துறை, மாயூரநாதர் கோயில் நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு அரசின் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோயம்புத்தூர் தேக்கம்பட்டியில் 48 நாள்கள் நடந்த இந்தப் புத்துணர்வு முகாமில் கலந்து கொண்டு உற்சாகத்துடன் வலம் வந்த யானை, முகாம் நிறைவடைந்து இன்று (மார்ச்.28) அதிகாலை மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு மீண்டும் வந்தடைந்தது.
புத்துணர்வு முகாமிலிருந்து திரும்பிய மாயூரநாதர் கோயில் யானை - Thekkampatti Refreshment Camp
நாகப்பட்டினம்: தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் கலந்து கொண்ட மாயூரநாதர் கோயில் யானை ’அபியாம்பிகை’ முகாமிலிருந்து திரும்பியது.
![புத்துணர்வு முகாமிலிருந்து திரும்பிய மாயூரநாதர் கோயில் யானை யானை அபயாம்பிகை யானை பூமா யானை அபிராமி மாயூரநாதர் கோயில் யானை Mayuranathar Temple Elephant தேக்கம்பட்டி முகாம் Thekkampatti Camp Thekkampatti Refreshment Camp Mayuranathar Temple Elephant Returned From Refershment Camp](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11197369-thumbnail-3x2-ngp.jpg)
கோயிலுக்கு வந்த யானைக்கு இந்து அறநிலையத்துறை மயிலாடுதுறை ஆய்வாளர் கண்ணதாசன் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல், இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் கட்டுப்பாட்டிலுள்ள உப்பிலியப்பன் கோயில் யானை பூமாவும் இன்று காலை முகாமிலிருந்து திரும்பியது. இந்தாண்டு திருக்கடையூர் யானை அபிராமி, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முகாமுக்குச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிறப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் யானை!