மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் துலா உற்சவம் காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறும். சிவபெருமானின் அனுக்கிரகத்தின்படி கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் அனைத்தும் இந்த காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி தங்களது பாவத்தை போக்கிக்கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.
மாயூரநாதர்சுவாமி திருக்கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
மயிலாடுதுறை: மாயூரநாதர்சுவாமி திருக்கோயிலில் துலா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு 10 நாள் உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இன்று (நவ.,6) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி இன்று ஸ்ரீ மயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. இதில் குறைந்த அளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். துலா உற்சவத்தின் பத்து நாட்களும் அஸ்திரதேவர் கொட்டும் நூலாக காவிரியில் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க:உப்பிலியப்பன் கோயில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்