நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று 823 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன் - seperate district
நாகப்பட்டினம்: அடுத்த வருடம் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

minister maniyan
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சர் ஓ.எஸ். மணியன்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு திருநெல்வேலி, வேலூர் ஆகிய மிகப்பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. அதேபோன்று மயிலாடுதுறையும் அடுத்த ஆண்டு தனி மாவட்டமாக பிரிக்கப்படும். இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் அறிவிப்பார்’ என்று தெரிவித்தார்.