மயிலாடுதுறை:நடிகர்விஜய்யின் பிறந்தநாள் நேற்று (ஜூன் 22) கொண்டாடப்பட்டது. திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலர் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். விஜய்யின் ரசிகர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு இடங்களில் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில், சீர்காழியை அடுத்த ஆச்சாள்புரம் தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி சார்பாக நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு (ஹெல்மெட்) தலைக்கவசம் அணிந்து, மோட்டார் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு இன்று (ஜூன் 23) இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட்டது.