மயிலாடுதுறை:சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் இன்று (ஜூன் 26) ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கிருத்திகை மண்டபத்தில் எழுந்தருளிய செல்வமுத்துக்குமார சாமிக்கு பால், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் முதலான 51 வகை நறுமண திரவியப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகா அர்ச்சனை நடைபெற்று மகா தீபம் காட்டப்பட்டது.