தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘நடக்காத பணிகளுக்கு கணக்கு’ - கூட்டத்தை புறக்கணித்த கவுன்சிலர் - Mayiladuthurai councilor problem

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் நடக்காத பணிகளை நடந்ததாக கணக்கு காட்டி ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Mayiladuthurai  union meeting
Mayiladuthurai union meeting

By

Published : Jun 29, 2021, 2:31 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் காமாட்சி மூர்த்தி தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

கூட்டத்தில் ஒன்றிய பொது நிதியில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டி, உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து திமுக ஒன்றியக் குழுத் தலைவரை கண்டித்து திமுகவை சேர்ந்த கவுன்சிலர் முருகமணி வெளிநடப்பு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முருகமணி, "ராதாநல்லூர், வேப்பங்குளம், பட்டவர்த்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர், சாலை வசதிகள் செய்யப்படாமலேயே அதற்காக செலவு செய்ததாக பில் போட்டுள்ளனர். ஒரே சாலையை வேறு வேறு இடங்களில் போட்டதாகவும் கணக்கு காட்டுகின்றனர்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் கூட்டம்

ஊராட்சி ஒன்றிய பணிகள் குறித்த விபரங்களின்றி அதற்கான நிதியில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய தீர்மானங்கள் உறுப்பினர்களின் அனுமதியின்றியே திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 38 லட்சம் ரூபாய் அளவில் முறைகேடுகள் நடைபெற்றதை நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிந்தேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாணவர்களுக்காகவே நான்... தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தலைமையாசிரியர்!

ABOUT THE AUTHOR

...view details