மயிலாடுதுறை:திருஇந்தளுரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் ஆலயம், பஞ்ச அரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22ஆவது திவ்ய தேசமாகும்.
இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு, இன்று (ஜன. 13) அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு பெருமாள் தங்க ரெத்தின அங்கியில் எழுந்தருளினார்.
பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு இதனைத் தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார்.
அப்போது கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தொடர்ந்து வழிபாட்டுக்காக பக்தர்கள் கோயிலின் வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இதையும் படிங்க: நெல்லையப்பர் கோயிலில் 'நெல்லைக் காத்த திருவிளையாடல்' நிகழ்ச்சி