நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தின் தேர்தல் துணை வட்டாட்சியர் மகேஷ் என்பவருக்கு கரோனா தொற்று இன்று (செப்டம்பர் 5) உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மயிலாடுதுறை துணை வட்டாட்சியருக்கு கரோனா உறுதி! - கரோனா பாதிப்பு
நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் துணை வட்டாட்சியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
Corona cases in nagapattinam
இதையடுத்து, வட்டாட்சியர் அலுவகத்தில் பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அலுவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, உடனடியாக வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டது. மூன்று நாள்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் முருகானந்தம் தெரிவித்தார்.