தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

96 சிற்றிலக்கியங்களை 45 விநாடிகளில் கூறிய பள்ளி மாணவிக்கு விருது!

96 சிற்றிலக்கியங்களை 49 விநாடிகளில் ஒப்புவித்த மயிலாடுதுறை பள்ளி மாணவியின் சாதனை நோபல் வேர்ல்டு ரெக்கார்டில் இடம் பெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 24, 2022, 6:45 PM IST

நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம் பிடித்த மயிலாடுதுறை மாணவி ஜீவனாஸ்ரீ!

மயிலாடுதுறை: சௌந்தரபாண்டியன் மகள் ஜீவனாஸ்ரீ, 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சௌந்தரபாண்டியன் தமிழாசிரியர் என்பதால் சிறுவயது முதல் ஜீவனாஸ்ரீக்கும் தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் ஆர்வம் இருந்துள்ளது.

இதையடுத்து, அவர் பள்ளியில் நடந்த பல்வேறு தமிழ் கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளார். இந்நிலையில், தமிழ் சார்ந்து ஏதேனும் சாதனை படைக்க வேண்டும் என விரும்பிய ஜீவனாஸ்ரீக்கு தமிழ் சிற்றிலக்கியங்களின் பெயர்களை கற்றுத் தந்துள்ளார், சௌந்தரபாண்டியன். இதையடுத்து, 96 சிற்றிலக்கியங்களின் பெயர்களையும் குறைந்த நேரத்தில் ஒப்புவிக்க மாணவி தயாரானார்.

இதையடுத்து, இவரது சாதனையை நோபல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு (Nobel World Record) சாதனையாகப் பதிவு செய்தது. இதில், மாணவி 96 சிற்றிலக்கியங்களின் பெயர்களை 49 வினாடிகளில் சொல்லி சாதனை படைத்துள்ளார். நோபல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர் ஜீவனாஸ்ரீக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாஜக எங்குள்ளது.. மொத்த உறுப்பினர்கள் எவ்வளவு.. கேள்வி எழுப்பிய செந்தில் பாலாஜி..

ABOUT THE AUTHOR

...view details