மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று அடையாள ஆர்ப்பாட்டத்தை, தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்றது. பின் பேசிய பொன்குமார், "தென்காசி, செங்கல்பட்டை புதிய மாவட்டங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
'மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவியுங்கள்!' - வலுக்கும் போராட்டம் - mayiladuthurai bifurcation
நாகை: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று தமிழ்நாடு கட்டட தொழிலாளர் சங்க மாநில தலைவர் பொன்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சங்க மாநில தலைவர் பொன்குமார்
ஆனால் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கின்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கையை அரசு செவிசாய்க்காமல், கும்பகோணம் புதிய மாவட்டமாக விரைவில் உதயமாகும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே மக்களின் கோரிக்கையை அரசு மறுபரிசீலனை செய்து கூடிய விரைவில் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.