தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலரின் கார் டிரைவருக்கு கரோனா - நாகை மாவட்ட செய்திகள்

நாகை : மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலரின் கார் டிரைவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆர்.டி.ஓ.அலுவலகம் மூடப்பட்டது.

mayiladuthurai rdo office Closed
mayiladuthurai rdo office Closed

By

Published : Aug 8, 2020, 3:18 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கருத்துகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.கள், பூம்புகார் எம்.எல்.ஏ.கள் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட மற்ற எம்.எல்.ஏ.கள், சிறப்பு அலுவலர்கள் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாவட்ட சிறப்பு அலுவலரின் கார் டிரைவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாவட்ட சிறப்பு அலுவலர் அலுவலகம் உள்ள மயிலாடுதுறை ஆர்.டி.ஓ.அலுவலகம் மூன்று நாள்களுக்கு மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆர்.டி.ஓ.அலுவலகம் வரும் 10 ஆம் தேதி திறக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details