மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன்(32). லாரி டிரைவரான இவருக்கும், மல்லியம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (27) என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு மகள் இருக்கிறார். தற்போது சூர்யா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு சிலம்பரசன் ரூ.16 ஆயிரத்திற்கு புதிதாக ஆன்ட்ராய்டு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அறிந்த சூர்யா வருமானத்திற்கு மீறி செல்போன் தேவையா என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கோபித்துக்கொண்டு சூர்யா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
சமாதானத்திற்கு பிறகு தற்கொலை
சில நாள்களுக்கு பின் சூர்யாவை அவரது தாயார் அம்சவல்லி சமாதானம் செய்து, கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜூலை 11) அதிகாலை 3 மணிக்கு வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தபோது மின் விசிறி பொருத்தும் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.