தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் மனைவியை கைவிட்ட காவலர்.. பெண் காவலருடன் 2வது திருமணம்.. கதறி அழுத மனைவியின் கண்ணீர் கதை! - with Female Police and

காதல் மனைவியை மோசடியாக விவாகரத்து பெற்ற காவலர், பெண் காவலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில், மனைவி மற்றும் அவரது உறவினர்களுடன் தப்பித்து திருவெண்காடு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சட்டப்படி விவாகரத்து பெறாமலே தன்னை ஏமாற்றி விட்டு மற்றொருவரை இரண்டாவது திருமண செய்து கொண்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல் மனைவி காவல்நிலையத்தின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 28, 2023, 8:13 AM IST

Updated : Mar 28, 2023, 9:11 AM IST

காதல் மனைவியை கைவிட்ட காவலர்.. பெண் காவலருடன் 2வது திருமணம்.. கதறி அழுத மனைவியின் கண்ணீர் கதை!

மயிலாடுதுறை:கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் மகள் சபிதா(27). இவர் தனது உறவினரான கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராம்குமார்(30) என்பவரை 2016ஆம் ஆண்டு முதல் காதலித்துள்ளார். பின்னர் ராம்குமாருக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது, திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அப்போது, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருவெண்காடு கிராமத்தைச் சேர்ந்த திருவெண்காடு காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ரம்யா(33) என்பவருடன் ராம்குமாருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு ராம்குமாருக்கும், சபிதாவுக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனால், ரம்யாவுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக ராம்குமார் சபிதாவை வெறுக்கத் தொடங்கியுள்ளார். இதனால், மனைவி சபிதா தன் வீட்டில் இருக்கும்போதே அவரது (சபிதா) பெற்றோர் வீட்டில் உள்ளதைப் போன்று ஆலப்பாக்கம் முகவரிக்கு விவாகரத்துக்கான நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

இதையடுத்து, தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து சபிதா தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். சபிதாவுக்கு தெரியாமலேயே மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஒருதலைபட்சமாக ராம்குமார் மோசடியாக விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில், நேற்று மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புதன் ஸ்தலம் கோயிலில் ராம்குமார் - ரம்யா இருவரும் திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.

இதுகுறித்து, தகவலறிந்த சபிதா தனது குடும்பத்தினருடன் அங்கு சென்று ராம்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இதையடுத்து, அங்கிருந்து தப்பியோடிய ராம்குமார்-ரம்யா ஆகிய இருவரும் திருவெண்காடு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து, அங்கு வந்த சபிதா காவல் நிலைய வளாகத்திலேயே தரையில் அமர்ந்து அழுது வாழ்க்கை பறிபோனதே என்று கதறினார்.

இதில் சம்பந்தப்பட்ட இருவரும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கச்சொல்லி திருவெண்காடு போலீஸார் சபிதாவை அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, சபிதாவின் குடும்பத்தினர் நேற்று மாலை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷாவிடம் தனது கணவன் மோசடியாக விவாகரத்துபெற்று வேறொரு திருமணம் செய்ய முயன்றது குறித்து புகார் அளித்தார்.

அவரிடம் புகாரைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி என்.எஸ்.நிஷா, சீர்காழி டிஎஸ்பி அலுவலகத்துக்கு புகாரை அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட தனது காதல் கணவர் வெறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த நிலையில், தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பாதிக்கப்பட்ட சபிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'சபிதா ஆகிய தானும் எனது கணவரான ராம்குமாரும் ஆறு வருடங்களாக காதலித்து 2016-ல் ஜூன் 19ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக தனது கணவருடன் அவரது வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தார். இதனிடையே, யாருக்கும் தெரியாமல் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அவரே விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், சரியாக வீட்டிற்கு வரமால் உள்ளார் என்று தான் நெய்வேலி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும், அப்போது தான், அவர் தன்னை அவரது மனைவியே இல்லையென மாயவரத்திலுள்ள கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒருதலைபட்சமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்து விவாகரத்து பெற்றுள்ளார் எனத் தெரியவந்தது.

இதனிடையே, தனது கணவருக்கும் சீர்காழி காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ரம்யாவிற்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்பெண் காவலர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், மேலும் இவை குறித்து அவரது பெற்றோரிடமும் மூன்று முறை கண்டித்துள்ளதாகவும் கூறினார். பின்னர், அப்பெண் காவலரின் சகோதரர்களும் நீயும் எனது சகோதரி போலதான்; உனது வாழ்க்கையை எவ்வித பிரச்சனையும் எனது சகோதரியால் வராது என்று கூறியிருந்ததாக தெரிவித்தார்.

பின்னர் மீண்டும், எனது கணவர் சரியாக வீட்டிற்கு வராமல் இருந்த நிலையில், அவர் மீது புகார் அளிக்க சென்றபோது தான், ஒருதலைபட்சமாக விவாகரத்து வாங்கியது தனக்கு தெரிந்தது என வருந்தினார். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் தான், எனது கணவரும் அந்த பெண் காவலரும் திருவெண்காடு சுவதாரண்யேசுவரர் கோயிலில் திருமணம் செய்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன் என்றார். எனவே, காவல்துறையினரும் நீதிமன்றமும் விசாரணை மேற்கொண்டு தனக்கு நியாயம் வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை இல்லாததால் நோயாளிகள் தரையில் படுக்கும் அவலம்!

Last Updated : Mar 28, 2023, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details