மயிலாடுதுறையில் பாதாளச் சாக்கடையால் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நகரில் தரங்கம்பாடி சாலை,கச்சேரி ரோடு, சின்னக்டைத்தெரு உள்ளிட்ட 12 இடங்களில் பாதாளச் சாக்கடை குழாய்கள் உடைந்து 20அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி அப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர். இதனையடுத்து குழாய்களில் ஏற்பட்ட பழுதை நகராட்சி நிர்வாகம் சரிசெய்தது.
இந்நிலையில் பிரதான சாலையில் உள்ள மகாதன தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீரானது ஒரு வாரமாக தேங்கி நிற்கிறது. இதனைக்கடந்து தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.
பாதாளச் சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்குகின்றது பாதாளச் சாக்கடைகளில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது என்றும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க :பள்ளி அருகே உள்ள ஆழ்துளைக் குழியை மூடிய காவல் துறையினருக்கு குவியும் பாராட்டு!