மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அரசு மருத்துவமனைகளில் தற்போது கரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராமலிங்கம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை உடனடியாக அனுப்ப மின்னஞ்சல் வாயிலாகக் கோரிக்கைவிடுத்துள்ளார்.
மயிலாடுதுறையில் தடுப்பூசி பற்றாக்குறை இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மயிலாடுதுறையிலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கும்பகோணத்திலும், தாலுகா மருத்துவமனைகள் பாபநாசம், சீர்காழி, திருவிடைமருதூர், தரங்கம்பாடி, குத்தாலம், 20-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தற்போது கரோனா தடுப்பூசிகள் இருப்பில் இல்லை.
இதனால் ஏரளாமான பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முடியாமல் திருப்பி செல்லும் நிலை உள்ளது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு மட்டும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் தற்போது தேவைப்படுகின்றன. எனவே, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உடனடியாக ஒரு லட்சம் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: செல்லப்பிராணியை வண்டியில் கட்டி இழுத்துச் சென்ற கொடூரர்கள்!