மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம் ஒன்றியங்களில் கடந்த 3 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் உள்ள 11 சாலைகளை தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 21.50 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சாலை அமைக்கும் பணியை பார்வையிட்ட மயிலாடுதுறை எம்.எல்.ஏ - சாலை அமைக்கும் பணியை பார்வையிட்ட மயிலாடுதுறை எம்.எல்.ஏ
மயிலாடுதுறை: பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் ஆய்வு செய்தார்.
MLA
இந்த பணியை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார் ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் சாமிநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.