தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயில் துலா உற்சவ தேரோட்டம் - திருவாவடுதுறை ஆதினம் பங்கேற்பு! - மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயில்

திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் தேரோட்டத்தை தொடங்கி வைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள்  தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயில் துலா உற்சவ தேரோட்டம்
மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயில் துலா உற்சவ தேரோட்டம்

By

Published : Nov 15, 2021, 8:58 PM IST

மயிலாடுதுறை: திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி கோயில் (Mayuranathar Temple) மயிலாடுதுறையில் உள்ளது.

மிகவும் பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாள்களும் துலா உற்சவம் நடைபெறும். அதே போல் இவ்வாண்டு துலா உற்சவம் கடந்த அக்டோபர் 18ஆம்தேதி தீர்த்தவாரியுடன் தொடங்கியது.

கடைசி பத்துநாள் உற்சவம் கடந்த 7ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13ஆம்தேதி திருக்கல்யாணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று (நவ.15) திருத்தேரோட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயில் துலா உற்சவ தேரோட்டம்

மாயூரநாதர் சுவாமி பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவாவடுதுறை ஆதீனம் (Thiruvaduthurai aadheenam) 24ஆவது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பண்டார சன்னதி சுவாமிகள் தேரோட்டத்தை தொடங்கி வைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா நாளை (நவ.16) மதியம் 1 மணியளவில் நடைபெறவிருந்தது.

திருவாவடுதுறை ஆதினம் பங்கேற்பு

இதையும் படிங்க: சபரிமலை நடை இன்று திறப்பு; பம்பையில் பக்தர்கள் நீராடத் தடை!

ABOUT THE AUTHOR

...view details