மயிலாடுதுறை:தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவின்றித் தவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாடுதுறையில் சிலர் ஊரடங்கால் வேலை இழந்து வாழ்வாதாரத்திற்கு தவித்து வருகின்றனர். இதனைப் போக்கும் பொருட்டு அம்மாவட்டத்தில் பரவலாக தங்கி சில்லறை, மொத்த வணிகம், அடகுக்கடை ஆகியவற்றை நடத்தி வரும் ஜெயின் சங்கத்தினர், அவர்கள் வசிக்கும் கட்டடத்தில் தாங்களே பூரி, லட்டு ஆகியவற்றைத் தயாரித்து, அதனை குடிநீர் பாட்டிலுடன் சேர்த்து பசியால் வாடும் ஏழை மக்களுக்கு கொடுக்க முன் வந்தனர்.
இந்த சேவையை யுவா ஜெயின் சங்கத் தலைவர் மகாவீர்சந்த் ஜெயின் தலைமையில் லவ்னீஸ் ஜெயின், கிஷோர் குமார், ஸ்ரீசந்தர், நீரஜ் ஆகிய நிர்வாகிகள், தன்னார்வலர்களின் உதவியுடன் சேர்ந்து செய்தனர்.