தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டம் மயிலாடுதுறை - without corona

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் மாறியுள்ளது.

கரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டம் மயிலாடுதுறை
கரோனா பாதிப்பு இல்லாத முதல் மாவட்டம் மயிலாடுதுறை

By

Published : Mar 8, 2022, 9:09 AM IST

மயிலாடுதுறை:தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. இதனிடையே ஒரு சில மாவட்டங்களில் மட்டும் தினசரி கரோனா பாதிப்பு பூஜ்ஜியம் என வந்த போதும், ஆக்டிவ் கேஸஸ் எனப்படும் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மட்டும் இதுநாள்வரை எந்த மாவட்டத்திலும் பூஜ்ஜியத்தை தொடவில்லை.

இந்நிலையில், முற்றிலும் கரோனா பாதிப்பு இல்லாத தமிழ்நாட்டின் முதல் மாவட்டம் என்ற அந்தஸ்தை மயிலாடுதுறை மாவட்டம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து பூஜ்ஜியம் என்றிருந்தது.

இந்நிலையில் சிகிச்சை பெற்ற அனைவரும் வீடு திரும்பியுள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக 26ஆயிரத்து 496 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 200-க்கும் கீழ் குறைந்த கரோனா தொற்று!

ABOUT THE AUTHOR

...view details